இந்தியாவில் ஒரு மருந்துக்கடை / மருந்தக வணிகம்  தொடங்குவது எப்படி?

medical store, pharmacy business, small business, business accounting

மருந்தக  வணிகமானது இந்தியாவில் ஒரு பசுமைமாறா  வணிகமாகும், அது பொருளாதார சுழற்சிகளால் பாதிக்கப்படுவதில்லை .ஒருவரிடம் குறைந்தபட்ச மூலதன முதலீடு மற்றும் இடவசதி  இருந்தால் போதும் , இந்தியா முழுவதும் பல வணிகர்களுக்கு மருந்தக வணிகம் சிறந்ததாகயிருக்கும். .

மருந்து கடைக்கு மருந்தக உரிமம் பெறுவதற்கு தேவையானவை :

#1. ஒரு மருந்தாளுனர்:

முதலில், நீங்கள் ஒரு பி  ஃபார்ம் / எம் ஃபார்ம் பட்டதாரியா?

இல்லையெனில், உரிமத்தை பதிவுசெய்யும்பொருட்டு ,நல்லெண்ணநோக்கத்திற்காகவோ அல்லது ஊதியத்திற்காகவோ தன்  பெயரை கொடுக்க விரும்பும் மருந்தாளுனரை கண்டறிய வேண்டும்.

இதற்கு காரணம் என்னவென்றால் ,மருந்தக உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு  மருந்தாளுனரின்(உரிமையாளர் அல்லது ஒரு பணியாளர் )தகுதிச்சான்றிதழ்,ஆதாரமாக தேவைப்படும் .

#2.போதுமான சேமிப்பு இடவசதி :

ஒரு மருந்துக்கடை அல்லது மருந்தகம் அல்லது மொத்த விற்பனை நிலையம்  தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 10 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வாடகை ஒப்பந்தம்  மற்றும் / அல்லது வளாகத்தின் உரிமையாளர் சான்று, உங்களுக்கு தேவைப்படும்.

ஒருவேளை,மருந்தக வணிகம் விற்பனையானது ஒருங்கிணைந்த சில்லறை  மற்றும் மொத்த விற்பனையாக இருந்தால் 15 சதுர மீட்டர்  இடம் தேவைப்படும் .

#3.முதலீடு:

உங்களுக்கு உள்ளூர் பகுதி இலக்கு என்றால்  மீண்டும் உங்கள் அடிப்படை தேவை, ஒரு கடை (வாடகை அல்லது சொந்தம் ) இருக்கவேண்டும் .

முதலில் ,ஒரு கடை (வாங்க / வாடகைக்கு) செலவு  +ஆரம்பத்தில் சரக்கு வாங்கும் செலவு ,ஆகிய கணக்கை   நீங்கள் உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .ஒரு  மருந்து கடையின் வாடகை அது அமைந்திருக்கும்  நகரம் ,இருப்பிடம் மற்றும் அளவை பொறுத்து ரூபாய் 10,000 முதல் ரூபாய் 10 லட்சம் வரையிலும் இருக்கலாம்.

#4 மருந்தாளுனரை பணியமர்த்துதல் :

முக்கியமாக, மருந்துகளின் விற்பனை நேரத்தில், வேலை நேரம் முழுவதும் ஒரு தகுதி வாய்ந்த நபர் பணியில் இருக்க  வேண்டும்.

வழக்கமாக, உங்கள் மருந்துக்  கடையில் ஒரு மருந்தாளுனரை பணியமர்த்துவதற்கு  நீங்கள் ரூபாய் 5,000 முதல் ரூபாய் 30,000 / மாதம் ஒதுக்கி வைக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த தகுதியுள்ள நபர்  கீழ்கண்ட தகுதிகளுடனும் இருத்தல் அவசியம்:

  • மருந்தியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர் அல்லது
  • மருந்துகள்  கையாள்வதில் 1 ஆண்டு அனுபவமுள்ள பட்டதாரி அல்லது
  • எஸ்.எஸ்.எல்.சி  தேர்ச்சிப்பெற்று  மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட  மருந்துகள் கையாளுவதில் 4 ஆண்டு அனுபவம் உள்ளவர் .

#5 குளிர் சேமிப்பு வசதி:

மிக முக்கியமாக, மருந்தக  வளாகத்தில் ஒரு குளிர்ச்சாதனப் பெட்டி இருத்தல் வேண்டும்.

ஏனெனில் தடுப்பூசிகள், செரா, இன்சுலின் ஊசி போன்ற பல மருந்துகளின் பெயரிடல்களின் விவரங்களின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட வேண்டும்.

#6 தேவையான ஆவணங்கள்:

ஒரு மருந்தக  வணிகம் தொடங்க தேவையான ஆவணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

இருப்பினும், இந்தியாவில்  மருந்துப்பொருட்கள் உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான தேவையான ஆவணங்களின்  பட்டியல் இது.

  1. பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்  மருந்தக உரிமம் விண்ணப்ப படிவம்.
  2. விண்ணப்பத்தாரரின் நோக்கம், பெயர் ,பதவி மற்றும் கையொப்பம் அடங்கிய முகப்புக்கடிதம்.
  3. மருந்துப்பொருட்கள்  உரிமத்தை பெறுவதற்கான வைப்புத்தொகை செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு(challan )
  4.  பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அறிவிப்பு வடிவம்
  5. வளாகத்திற்கான மூலப் படம் (புளூபிரிண்ட்)
  6. வளாகத்திற்கான தளம் திட்டம் (ப்ளூபிரண்ட்).
  7. வளாகத்தின் உரிமை  அடிப்படை பத்திரம் .
  8. ஒரு மருந்துக்  கடையின் உரிமையாளர் / பங்குதாரர்களின் அடையாள சான்று மற்றும் புகைப்படங்கள்.
  9. வாடகைக்கு இருந்தால்,அந்த வளாகத்தின் உரிமை  ஆதாரம்.
  10. வணிக உள்ளமைப்பின் ஆதாரம்(இணைத்தல் சான்றிதழ் / எம் ஓ ஏ / ஏ  ஓ ஏ / கூட்டு ஒப்பந்தம்).
  11. மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ், உரிமையாளர் / பங்குதாரர்கள் / இயக்குநர்கள்  அனைவரும் குற்றமற்றவர் என்ற உறுதிச் சான்றிதழ் .
  12. முழுநேர வேலை பார்க்கும் பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர் அல்லது தகுதிவாய்ந்த நபர் குற்றமற்றவர் என்ற  உறுதிச் சான்றிதழ் .
  13. பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர் / தகுதியுள்ள நபர்  நியமனம் செய்யப்பட்டிருந்தால் ,அவரின் பணி நியமனக் கடிதம்.

அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு, ஒரு மருந்து ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று, மருந்து கடைக்கு அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வியாபாரின் அறிவுரை:

  • முதலாவதாக, தேவையற்ற போட்டியைத் தவிர்ப்பதற்காக பல  மருந்து கடைகள் ஏற்கனவே இருக்கும் இடத்தில் கடை வாடகைக்கு/சொந்தமாக   எடுப்பதை தவிர்க்கவும்.
  • ஒழுங்குமுறை சாராமல் ,நீங்கள் ஒரு டாக்டர் / மருத்துவமனையுடன் எப்போதும் வலையமைப்பை உருவாக்கி  நீங்கள் “டை-அப்” செய்து கொள்ளலாம் , இது வாடிக்கையாளர் தளத்தை அணுகுவதற்கான எளிய வழியாகும்.(இது சரியான நெறிமுறை அல்ல,ஆனால் பெரும்பாலானவர்கள்  இந்த பாதை பின்பற்றுகிறார்கள்).
  • எல்லாவற்றிற்க்கும் மேலாக , இந்தியாவில் ஒரு மருந்தக  வணிகத்தை தொடங்க IndiaFilings உதவுகிறது. மேலும் தகவலுக்கு, IndiaFilings.com க்கு வருகைத்தருக .

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

 

.

 

You May Also Like

Leave a Reply