இந்தியாவில் சில்லறை விற்பனையாளராக:

Retailers in India, accounting software, GST, invoicing, SME, small Business

வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பொருட்களை / சேவைகளை விற்க விரும்புகிறீர்களா? சரி, பின்னர் ஒரு விற்பனையாளராக இருப்பது உங்களுக்கு சரியான தேர்வு.

மொத்த விற்பனையாளரோ அல்லது சப்ளையரோ இல்லாமல் ஒரு வியாபாரம் அல்லது நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நபர், சில்லறை விற்பனையாளர் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு உற்பத்தியாளரும் விற்பனையை நுகர்வோருக்கு நேரடியாக வழங்க முடியாது, அதேபோல நுகர்வோர் தங்கள் தேவைகளுக்காக உற்பத்தியாளர்களை நேரடியாக அணுக முடியாது. சில்லறை விற்பனையாளர்களே உற்பத்தியாளர்கள் மற்றும் இறுதி நுகர்வோருக்கும் இடையே உள்ள இணைப்பு பாலமாகும் .

ஒரு சில்லறை விற்பனையாளராக,  எந்த பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவோடு இருத்தல் அவசியம். உதாரணமாக, சில பிரபலமான பிரிவுகள் உணவு, தானியக்க  பாகங்கள்,பலசரக்கு கடைகள், ஆடைகள், வீட்டு அலங்காரம், மின் மற்றும் மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு மேம்பாட்டுக்கான தேவையான பொருட்கள் அடங்கிய கடைகள் ஆகியவை.

சில்லறை விற்பனையாளராக ஆவது எப்படி?

ஒரு நபர் அவரது அல்லது அவளது பொருட்கள் / சேவைகளை விற்க விரும்பினால் பல்வேறு சட்ட அம்சங்களை பின்பற்றுதல் அவசியம். தனது நிறுவனத்தை பதிவுசெய்தல், ஒரு இடம் / கடையை வாடகைக்கு எடுத்தல்,விநியோகத்தை நிர்வகித்தல் விநியோக மாதிரி, வருவாய் மாதிரி, வரி நிர்வாக மற்றும் வரி இணக்கம் ஆகியவற்றை முறையாக தெரிந்திருத்தல் வேண்டும்

அதற்க்கான கட்டாய நடவடிக்கைகளை மட்டும் பார்ப்போம்:

  1. ஜிஎஸ்டியின் கீழ் சட்ட அம்சம்:ஜிஎஸ்டின் கீழ் நிறுவனத்தை பதிவுசெய்தல் இந்தியாவில் எந்தவொரு வணிகத்திற்கும் கட்டாய தேவையாகும்.

நீங்கள் ஜிஎஸ்டியின் கீழ்  இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும்.

  1.   உங்களது நிறுவனம் ஆண்டு வருமானம் 20 இலட்சத்தை கடக்கையில்.
    2.பொருட்கள் மற்றும் விநியோக சேவைகள் எங்கு நடைபெறுகிறது என்பதன் இணையத்தளம் இருக்குமானால்.
  2.   முந்தைய சட்டத்தின் கீழ் வாட்  பதிவுசெய்யப்பட்டிருந்தால்
  3.   பிற மாநிலங்களுக்கு இடையே பரிவர்த்தனைகள் செய்தல்
  4.   ஒரு விநியோகஸ்தரரிடமிருந்து இணையவழி ஒருங்கிணைப்பாளருடன் தொழில் புரிவது

நிகழ்வு 1:  உங்களுடைய வருடாந்திர விற்பனை 20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவீர்கள், வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை.

ஆனால் 20 லட்சத்திற்க்கும் மேல் விற்பனை நடைபெற்றால் , ஜிஎஸ்டியின் கீழ்  பதிவது கட்டாயம்.

நிகழ்வு 2:  உங்கள் ஆண்டு விற்பனை 20 முதல் 50 லட்சம் வரை இருந்தால். ஜி.எஸ்.டி சர்வு ஏற்பாட்டுத் திட்டத்திற்கு நீங்கள் தேர்வு செய்யலாம்,இதன் மூலம் ஒரு நிலையான வரியை (1-2% வரையில் இருக்கும்) உங்கள் ஆண்டு வருவாயைப் பொறுத்து  செலுத்த அனுமதிக்கிறது

நிகழ்வு 3:  உங்கள் வருடாந்தர விற்பனை 50 லட்சத்திற்கும் அதிகமானால் – நீங்கள் ஒரு வழக்கமான வியாபாரி போன்றே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

2. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் நல்ல தொடர்பில் இருத்தல்

விநியோக நேரத்தை குறைப்பதற்காக மொத்த விற்பனையாளர்களுடன் நன்கு இணைப்பில் இருத்தல் வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கடையில் நீண்ட நேரம் இறுத்தி வைக்க போதுமான அளவில் பலதரப்பட்ட சரக்குகள்  வைத்திருக்க வேண்டும். இதனால் பின்புலத்தில் நாம் செய்யும் கடின உழைப்பானது பாராட்டும் விதத்தில் அமையும் . திறமையான வழங்கல் சங்கிலி மற்றும் தளவாடங்கள் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை கொண்டு அதிக வாடிக்கையாளர்களை  சில்லறை விற்பனையாளர்களுக்குபெற்றுத் தரும்.

  1. கணக்கியல், பட்டியலிடல் / விலைப்பட்டியல், வரிவிதிப்பு மற்றும் ஜி.எஸ்.டி ரிட்டர்ன்ஸ் தாக்கல்:

உண்மையான சிக்கல் இங்கே தான் உள்ளது. வியாபாரம் இலாபங்கள் மற்றும் நஷ்டங்களை கையாள்வது பற்றி மட்டுமல்ல, அதற்க்கும் மேலாக.குறிப்பாக ஜி.எஸ்.டியின் கீழ், ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது எளிதானது, ஆனால் உண்மையான சவால் அதன் நிர்வாகத்தில் தான் உள்ளது.

முந்தைய மறைமுக வரி நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் , சில்லறை விற்பனையாளர்கள் வழக்கமாக வரி செலுத்துவதிலிருந்து  தப்பித்துக்கொண்டார்கள், ஏனெனில் அவர்களின் உண்மையான கொள்முதல் மற்றும் விற்பனையை எந்த வகையிலும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் அவர்களது பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை முறையற்றவை. அதாவது எந்த விலைப்பட்டியலும் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படவில்லை,

இறுதியில், இத்தகைய விற்பனையின் பற்றிய எந்த பதிவுகளும் பட்டியலேட்டில் இடம் பெறவில்லை ஆகையால் வரி ஏய்ப்பு செய்வது மிகவும் எளிதாக இருந்தது.

அதேசமயம், ஜி.எஸ்.டி. கீழ், ஒவ்வொரு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதும் முக்கியமானது, இது வணிகமானது ஒரு உகந்த அளவில் இயங்குவதை உறுதிப்படுத்துகிறது. தொழில்கள் இயங்குவதற்கான மாற்றங்களை தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி வழங்கும்  என்பதையும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சில்லறை விற்பனை தொழில் இதற்கு விதிவிலக்கல்ல.

ஜி.எஸ்.டி கீழ் கணக்கியல் புத்தகங்கள்:

கணக்கு பதிவு மற்றும் ஜி.எஸ்.டியுடன் இணங்கி செல்லுதல் என்பது மிக சவாலான ஒன்று அதற்கு ஜி.எஸ்.டியுடன் இணக்கமாக செயல்படும் மென்பொருள் மிகவும் அவசியமானது. ஜிஎஸ்டி கணக்கியல் பதிவுகள்  நீங்கள் கையாள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் ஒன்றாகும்.

அனைத்து வணிகங்களும் தங்கள் வணிக இடத்தில் பின்வரும் பதிவுகளை பராமரித்தல் அவசியம் .

  • ·         பொருட்கள் உற்பத்தி
  • ·         பொருட்களின் உள் மற்றும் வெளிப்புற விநியோகங்கள் மற்றும் கதவு சேவைகள்
  • ·         சரக்கு கொள்ளிருப்பு
  • ·         உள்ளீட்டு வரி கடன்
  • ·         வெளியீட்டு செலுத்தக் கூடிய வரி மற்றும் செலுத்திய வரி

பல ஆண்டுகளாக இத்தகைய பதிவுகளை பராமரிப்பது அவசியம், மேலும் அவற்றை மின்னணு வடிவத்தில் வைத்திருப்பது வேலையை  மிகவும் எளிதாக்கும்.

ஜி.எஸ்.டி.யின் கீழ் இரண்டு வகையான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன

ஜிஎஸ்டின் கீழ் மற்றொரு வரிக்குரிய நபரிடம் பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் போது பரிந்துரைக்கப்படும் வடிவமைப்பில் விலைப்பட்டியல் வழங்குதல் என்பது கட்டாயமாகும்

  1.       ஜி.எஸ்.டி கடனிற்கு அனுப்பப்படும் வரிக்குரிய விலைப்பட்டியல்.
  2.       விநியோகத்திற்கான விலக்கு அளிக்கப்பட்டால் அதற்குரிய விலைப்பட்டியல் வழங்குதல்  அல்லது விநியோகம் ஒருங்குசேர் திட்டத்தில் இருந்தால் அதாவது, ஜி.எஸ்.டி. கடன் இல்லாதபட்சத்தில்
  3.       விலைப்பட்டியல் வழங்குவதற்கான கால வரையீடு என்ன?
  4.   ஜி.எஸ்.டி விலைப்பட்டியலுக்கான சேவைகளை,  சேவைகள் வழங்கிய 30 நாட்களுக்குள் வழங்கியிருக்க வேண்டும்.
  5.   சரக்குகளுக்கான நிகழ்வுகளில், சரக்கானது உங்கள் வளாகத்தில் இருந்து சென்ற அடுத்த நிமிடத்தில் விலைப்பட்டியல் தயார் செய்தல் அவசியம்.
  6. விலைப்பட்டியல்களுக்கான பிரதிகள் எத்தனை வேண்டும்?

சேவைகளை வழங்கும் போது

விலைப்பட்டியல் 2 பிரதிகள்: 1 – பெறுபவர், 1 – விநியோகஸ்தர்

சரக்குகளை விற்பனை செய்யும் போது

விலைப்பட்டியல் 3 பிரதிகள்: 1 – பெறுபவர், 1 – விநியோகஸ்தர்

1 – இடமாற்றுபவர்

  1. ஜிஎஸ்டிக்கு இணக்கமான விலைப்பட்டியலை தயார் செய்வது எப்படி?

ஒரு தொழில்முறை ஜிஎஸ்டிக்கு இணக்கமான விலைப்பட்டியலை  எளிதாக உருவாக்க நீங்கள் தற்போதைய புதிய தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒரு கணக்கியல் மென்பொருளை தற்போது பயன்படுத்துகிறீர்கள் என்றால், இப்போது, ஜிஎஸ்டிக்கு இணக்கமான மென்பொருளுக்கு மேம்படுத்த வேண்டிய நேரம் இது.

ஆனால், ஜாக்கிரதை! வணிகங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, கணக்கியலில் இல்லை.

துரதிர்ஷ்டவசமாக, கணக்கியல் மென்பொருள் பெரும்பாலானவை கணக்காளர்களுக்காக உருவாக்கப்பட்டது, ஒரு தொழிலதிபர்களுக்காக அல்ல.ஒரு சில்லறை  விற்பனையாளராக நீங்கள் உங்கள் கணக்கியியலில் நேரத்தை செலவிடுவதை விட மாறாக உங்கள் வணிகத்தை மேம்படுத்தவே, நேரத்தை செலவிட வேண்டும். விருப்பமான ஆன்லைன் கணக்கியல் மென்பொருள் மற்றும் ஜிஎஸ்டி தயாராக உள்ள  வியாபார் கணக்கியல் மென்பொருளுக்கு உங்கள் வணிகத்தை மாற்றுவதன் மூலம் கணக்கியலை எந்த பதற்றமும் இன்றி கையாளுவது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும். தொழில்முறை ஜி.எஸ்.டி பணிகளை ஆதரிப்பது தொந்தரவற்றதாக இருக்கக்கூடும். மேலும், அது தானாகவே ஜிஎஸ்டியை கணக்கிடுகிறது.ஏற்கனவே ஜிஎஸ்டி இணக்கமானதால், வியாபார் பயன்பாடனது  நிச்சயமாக வரி கணக்கிடுதல் மற்றும் வரி செலுத்துதலை கவனித்துக்கொள்கிறது. வியாபார் ஜிஎஸ்டி கணக்கியல் மென்பொருள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

வியாபார் பயன்பாடனது பல்வேறு உள்ளடிக்கிய அம்சங்கள் கொண்டது, உங்கள் தொழில்களுக்கான சரக்குகளை நிர்வகிக்கவும், செலவுகளை நிர்வகிக்கவும், செல்லும் வழியிலே எளிதாக மதிப்பீடுகளை உருவாக்குதல், கட்டண பட்டியல், மதிப்பீடு செய்தல், வரி விதிக்கும் முறை மற்றும் இன்னும் பல.

வியாபார் பயன்பாடு  சில்லறை விற்பனையாளர்களுக்கு அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க உதவுகிறது மற்றும் தனிப்பயன் அறிக்கைகள் மற்றும் இருப்புநிலைகளை உருவாக்க உதவுகிறது. எங்கள் மென்பொருளை இயக்குவதற்கு, நீங்கள் ஒரு கணக்கியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறுதியாக , உங்கள் வியாபாரத்தை வளர்ப்பதில் நேரத்தை செலவழிப்பதைக் காட்டிலும் கணக்கியலில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தால் வியாபார் பயன்பாட்டிற்க்கு  இன்றே வேண்டிய தருணம்.

சரி, அனைத்திலும், ஒரு இலாபகரமான சில்லறை விற்பனையாளராக இருக்க, நீங்கள் வியாபாரத்தின் விதிகளை கற்றுக்கொள்ள வேண்டும், பிறகு நீங்கள் வேறு எவரையும் விட சிறப்பாக உங்கள் வணிகத்தில் தனித்துவமாக திகழ வேண்டும். உடனடியாக லாபம் சம்பாதிக்கும் குறிக்கோளை விடவும்  மூலோபாய ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதே முக்கியம். மேலும், நீங்கள் உங்கள் வணிகத்தை பொழுதுபோக்கு பாணியில் சில்லறை விற்பனை செய்ய முடியாது.நீங்கள் சில்லறை விற்பனையாளராக எதை செய்தாலும் உற்சாகமாகவும் பொறுப்புள்ளவராகவும் இருந்தாலன்றி, நீங்கள் லாபம் மற்றும் வெற்றிகரமாக இருக்க முடியாது.

உங்கள் ஜிஎஸ்டி சுமையை எளிதாக்குவதற்கு சரியான தொழில்நுட்பங்களை ஏற்று உங்கள் விற்பனை வணிகத்தை தொந்தரவின்றி -இலகுவாக இயக்கவும்.
ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

1 comment

  1. 1

Leave a Reply