இப்போது உங்கள் ஜிஎஸ்டி வரியறிக்கையின் நிலைமையை நீங்கள் பார்க்கலாம்:

Business accounting, GSTR , tax returns

இப்போது, வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி போர்ட்டிலில் தாக்கல் செய்யப்பட்ட வருவாய் வரியறிக்கையின் நிலையைப் பார்க்க முடியும்; அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

  1. https://www.gst.gov.in/ URL ஐ அணுகவும். ஜிஎஸ்டி முகப்பு பக்கம் காட்டப்படும்.
  2. சரியான சான்றுகளை கொண்டு  ஜிஎஸ்டி போர்ட்டிலில் உள்நுழைக.
  3. சர்வீசஸ்> ரிட்டர்ன்ஸ்> ட்ராக் ரிட்டர்ன் ஸ்டேட்டஸ் கட்டளை என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஜி.எஸ்.டி வரியறிக்கையை  தாக்கல் செய்யும் சமயத்தில் உங்களுக்கென்று ஒரு   விண்ணப்பப் படிவம் எண் (ஏஆர்என்) வழங்கப்படும். இந்த ஏஆர்என் உடன் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும்.

அ) ஏஆர்என் பகுதியில், உங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஏஆர்என்-ஐ உள்ளிடவும்.

ஆ)   தேடல் பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்பொழுது விண்ணப்பத்தின்  நிலை காட்டப்படும்.

விண்ணப்ப நிலைகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:

  1.  டு பி ஃபைல்ட் (தாக்கல் செய்ய வேண்டும்) : வரியறிக்கையானது தாக்கல் செய்யப்பட வேண்டும்   ஆனால் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.
  2. சப்மிட்டட் பட் நாட் ஃபைல்ட் (சமர்ப்பிக்கப்பட்டது தாக்கல் செய்யப்படவில்லை):  வரியறிக்கை சரிபார்க்கப்பட்டது ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை.
  3. ஃபைல்ட் – வேலிட் (தாக்கல் செய்யப்பட்டது – ஏற்கத்தக்கது) : வரியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  4. ஃபைல்ட் – இன்வேலிட் (தாக்கல் செய்யப்பட்டது – ஏற்றுக்கொள்ளதக்கதல்ல ) :  வரியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வரி செலுத்தப்படவில்லை. அல்லது குறைந்த அளவு வரி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப தகுதிநிலைகள் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கூறுகிறது.

துல்லியமான  ஜிஎஸ்டிஆர் அறிக்கைகளை உருவாக்க போராடுகிறீர்களா? வியாபார்-ஐ முயற்சிக்கவும்.  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் >>

Read this blog in English – You can now check your GST return status

ஹாப்பி வியாபாரிங்,vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

You May Also Like

Leave a Reply