உங்கள் வணிகத்தை டிஜிட்டலாக்கம் செய்கிறீர்களா நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்கள்:

உங்கள் வியாபார பரிவர்த்தனைகளை கண்காணிக்க காகிதமுறை  / கணினி விரிதாள்களை சார்ந்து உள்ளீர்களா?

ஆம் எனில், நீங்கள் உங்கள் தொழிற்துறையில்  புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனமாகவோ அல்லது ஒரு சிறு வணிகம் புரிபவராகவோ இருக்கின்றீர்கள் என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் உங்கள் வியாபாரத்தை சிரமமின்றி  எளிதில் நிர்வகிக்க உதவுகிற மென்பொருளை தேடிக்கொண்டிருக்கலாம்.

இவை அனைத்திற்க்கும் ஒரே தீர்வு வியாபார் என்னும் வணிக மேலாண்மை மென்பொருள்.  உங்கள் தொழில்களுக்கான சரக்குகளை நிர்வகிக்கவும், செலவுகளை நிர்வகிக்கவும், செல்லும் வழியிலே எளிதாக மதிப்பீடுகளை உருவாக்குதல், கட்டண பட்டியல், மதிப்பீடு செய்தல், வரி விதிக்கும் முறை மற்றும் இன்னும் பல அம்சங்களை கொண்டது,  இது முற்றிலும் உங்கள் வணிகத்தை நிர்வகிக்க ஒரு நேர்மையான அணுகுமுறை.

வியாபார் மென்பொருளானது நடைமுறை வணிக தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல்  மற்றும் ஜி.எஸ்.டி – உடன் இணங்கி உங்கள் வணிக கணக்குகளை நிர்வகிக்கிறது.

வியாபார் மென்பொருள் உங்கள் வணிகத்திற்க்கு எவ்வாறு  உதவுகிறது ?

# 1 உங்களுக்கு தெரியுமா? தொடங்கப்பட்ட  அனைத்து வணிகங்களும் முதல் 2 ஆண்டுகளில் 33%  தோல்வியை தழுவுகிறது என்று?

வலுவான வளர்ச்சியுற்ற தொழில்களும் கூட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்க்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதன் மூலம்  விரைவாக பணத்தை செலவு செய்வதன் விளைவாக தோல்வியடைகிறது. உங்கள் வணிக கணக்குகளை நீங்கள் எவ்வளவு புறக்கணிப்பு செய்கிறீர்களோ அதைவிட சிரமம் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. தொழில் மீதான உங்கள் புரிகணிப்பு உங்களையும் தொழித்துறையில் புறக்கணித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்!

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

வியாபார் உடன் உங்களுடைய வணிகத்தின் முறையான நிதி பதிவுகளை நீங்கள் சிரமமின்றி  நிதி சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும். சரியான நிதி பதிவுகள் மட்டுமே தொழில் சார்ந்த உங்கள் துறையில் நீங்கள் புரியும் வணிகத்தில் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். நிதி சார்ந்த  வருமானம் மற்றும் செலவினங்களில் உங்கள் வணிகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதால் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

இது, உங்கள் வணிகத்தில்  ஒரு நல்ல பிடியை உங்களுக்கு வழங்குகிறது.

# 2 நீங்கள் மட்டுமே உங்கள் தொழிலை நிர்வகித்துக் கொண்டிருந்தால்,உங்கள் வணிகத்திற்கு தேவையான கட்டணப் பட்டியல், சரக்கு நிர்வகித்தல் இன்னும் பலவற்றை நீங்களே மேற்கொள்ள வேண்டி வரும். உங்கள் வணிகமானது நல்ல வளர்ச்சி பாதையில் செல்லும்போது ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணத்தில் சிக்கல் இருக்கலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களாகவே முன்வந்து இதோ உங்களுக்கு கொடுக்கவேண்டிய பணம், வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுக்கமாட்டார்கள். இதை சிறிய இழப்பாக நீங்கள் கருதலாம். மறந்து விடவேண்டாம் கப்பலில் ஏற்படும் சிறிய துளையே அதை மூழ்கடிக்க வல்லது. உங்கள் வணிகத்தில் அலட்சியப்படுத்தப்படும் ஒவ்வொரு சிறிய இழப்பும் உங்கள் வணிகத்தை தோல்வி அடைய செய்ய வலியது.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

வியாபார் உடன் உங்கள் வணிகத்தை எளிதாக பின் தொடர உதவுகிறது. யார் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறார், நீங்கள் யாருக்கு கடன்பட்டிருக்கிறீர்கள்,செலவு இழப்புகள் நிர்வகிப்பு, வரவு செலவுத் திட்டத்தை மேற்கொள்வதன் மூலம்  சரக்குகளின் நிலையை தெரிந்து கொள்ள உதவும் ..

இதனால் உங்கள்  பணத்தை இழப்பதற்க்கு குறைவான வாய்ப்புகளே உள்ளது

# 3 சிறு வணிகக் கணக்கியல் நேரம் எடுத்துக்கொள்ளும், கடினமானது மற்றும்  சிக்கலானதும் கூட.

உங்கள் குழுவில் உள்ள பாவப்பட்ட எவரோ ஒருவர் உங்கள் வணிகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கலாம் (நீங்கள்  இல்லையென்றால்) அல்லது அதை நீங்கள் ஒரு கணக்காளரிடம் ஒப்படைக்கலாம் எவ்வாறு இருப்பினும் கணக்கியல் அவ்வளவு சுலபமானது அல்ல, ஆனால் வியாபார்  அதை எளிதாக்குகிறது

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

கணக்கை எவரொருவர் கையாண்டுகொண்டிருந்தாலும் வியாபார் அவர்களுடைய வேலை முழுவதையும் எளிதாக்குகிறது. கணக்குப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து, அறிக்கைகள் மற்றும் வரி கணக்கீடுகளை உருவாக்குதல் மற்றும் இன்னும் பல. வியாபார் போன்ற வணிக மேலாண்மை மென்பொருள் பின்புலத்தில் இவை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு உங்கள் தொழிலில் மேலும் கவனம் செலுத்த முடியும்.

வெளிப்படையாக, உங்கள் கணக்குப் பதிவியல்  வேலை எளிதாகிறது.

# 4 முறையான ஆவணங்கள் இல்லாமல் ஜி.எஸ்.டி – யின்  கீழ் வரி தயாரித்தல் என்பது ஒரு சித்திரவதை ஆகும்.

மேலும், அது நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். ஒன்று நீங்கள் ஓராண்டு முழுவதிற்குமான  (வேடிக்கையான ஒன்று தான்) ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருக்கலாம் அல்லது இந்த வேலையை செய்ய ஒரு கணக்காளரை சார்ந்து இருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் இது உங்கள் தொழிலுக்கான நல்ல அறிகுறி அல்ல.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

வியாபார் மிக முக்கியமாக நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வரிகளை தாக்கல் மற்றும் செலுத்தும் நேரம் வரும் போது உங்களுக்கு தேவையான நிதி தரவுகளை கணக்கிட்டு தந்து வரிவிதிப்பு வேலையை சுலபம் செய்கிறது.

இதன் விளைவாக, வரி செலுத்தும் நேரம்  நிச்சயம் உங்களுக்கு கடினமாக இருக்காது.

# 5 வியாபார பரிவர்த்தனைகள் ஒழுங்காக கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகையில், ஆபத்தானது குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்படுகிறது. ஒருவேளை  அரசாங்கம் உங்கள் நிறுவனத்திற்கு கணக்குப் பரிசோதனை செய்ய வந்தால் கூட, உங்கள் வணிக வரலாறு உங்களுக்கு சிறந்த நண்பராக இருக்கும்.

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

அரசாங்கத்தால் கேள்வி கேட்கப்படும் நேரங்களில் சரியான நிதி தரவுகளை வியாபார் உங்களுக்கு அளிப்பதன் மூலம் உங்கள் வணிகத்தில் பேருதவி புரிகிறது.

இதனால் தணிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்திற்கு தணிக்கைக்கு வருகையில் இது சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.

# 6 முறையற்ற குறைபாடான  நிதி பதிவுகள் உங்கள் வியாபார விரிவாக்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன.

உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக உங்கள் தொழில் கிளைகளை வேறொரு இடத்தில் துவங்கவோ அல்லது புதிய குழுவை பணியமர்த்தவோ செய்யலாம். அவ்வேளயில் குறைபாடுள்ள நிதிப்பதிவுகள் வியாபார வளர்ச்சியில் பெரிய சிக்கலை உண்டாக்கலாம். பொறுப்பாக  நிதி நடைமுறைகளை பின்பற்றாத, ஆதாரமற்ற நிதிப் பதிவுகளை உடைய ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க விரும்புவீர்களா?

இதனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது:

வியாபார் மிகவும் முக்கியம் வாய்ந்த உங்கள் வியாபாரத்தின் வணிக கணக்கு வழக்கு வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .

நீங்கள் அளவிடக்கூடிய மற்றும் கணித்து கொள்ளக்கூடிய வகையில் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

எனவே … நாங்கள் வியாபார் போன்ற வணிக மேலாண்மை மென்பொருளில் ஒப்பந்தத்தில் உள்ளோம். அனைத்து சிறு தொழிலதிபர்களுக்கும் கட்டாயம் தேவைப்படக்கூடிய ஒரு வணிக மேலாண்மை மென்பொருள் வியாபார் ஆகும். மேலும் தகவலுக்காக www.vyaparapp.in பார்க்கவும்.

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply