ஐ.டி.ஆர்(தணிக்கை அல்லாத வழக்குகள்)-ஐ தாக்கல் செய்வதற்கான நிலுவை தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ITR, business accounting, income tax, due date

தணிக்கை அல்லாத வழக்குகளில் வருமான வரியை இன்னும் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோருக்கு இங்கே ஒரு நல்ல செய்தி!

நிதி அமைச்சகம், ஐ.டி.ஆர்(வருமான வரி தாக்கல்)செய்வதற்கான நிலுவை தேதியை 2018 ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னர்(தணிக்கை அல்லாத வழக்குகளுக்கு மட்டும்) வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் வகையைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கலாம். அதேசமயம்,செப்டம்பர் 30 ஆம் தேதி வரை உள்ள தணிக்கை வழக்கானது  எந்த வித மாற்றமுமின்றி ஒரே மாதிரியாக இருக்கிறது. வரிகளை தாக்கல் செய்வதற்கும், கடுமையான தண்டனையை தவிர்க்கவும் இது ஒரு கடைசி சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த கால நீட்டிப்பானது இனி நீட்டிக்கப்படாமலும் போகலாம் என்பது நினைவில் இருக்கட்டும்.

எந்த ஐ.டி.ஆர்  எதற்கு தாக்கல் செய்வது என்பது தெரியாமல் இருக்கிறீர்களா?   இதை பாருங்கள்:

ஐ.டி.ஆர்-3 :

பின்வரும் ஆதாரங்களில் இருந்து வருமானம் கொண்டவர்கள் ஐ.டி.ஆர்-3 தாக்கல்  செய்யலாம்.

 • தனியுரிமை வணிகம்  அல்லது தொழில்.
 • கூடுதலாக,  வீடு சொத்திலிருந்து வரும் வருமானம் , சம்பளம் / ஓய்வூதியம் மற்றும் இதர ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் ஆகியவையும் அடங்கும்.

ஐ.டி.ஆர்-4:

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ஏ டி , பிரிவு 44ஏ டி ஏ  மற்றும் பிரிவு 44ஏ இ ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் நம்பத்தகுந்த வருமானத்தினைத் தேர்ந்தெடுத்திருந்தால் இந்த ஐ.டி.ஆர் ஐ  தாக்கல் செய்யுங்கள். இருப்பினும், உங்கள் வியாபாரத்தின் வருவாய் 2 கோடி ரூபாவைக் கடந்துவிட்டால், நீங்கள் Iஐ.டி.ஆர்-3 ஐ பதிவு செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர் -5:

ஐ.டி.ஆர் 5 ஐ , நிறுவனங்கள், எல்.எல்.பீ.ஸ் (லிமிடெட் லியபிலிட்டி  பார்ட்னர்ஷிப்), ஏஓபிஸ் (அஸோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) மற்றும் பி .ஓ .ஐஸ்   (பாடி ஆஃப் இண்டிவிஜூவல்ஸ் ) போன்ற நிறுவனங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும் .

ஐ.டி.ஆர் -6:(இந்த வருவாயை மின்னணு முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்)

பிரிவு 11-ன் கீழ் விலக்கு அளிப்பதாகக் கூறும் நிறுவனங்களைத்  தவிர மற்ற நிறுவனங்கள் (தொண்டு அல்லது மத காரணங்களுக்காக பயன்படுத்தும் சொத்துக்களிருந்து வரும் வருமானம்)  .

ஐ.டி.ஆர் -7:

கீழே உள்ள ஏதேனும் ஒன்றை நீங்கள் சார்ந்திருந்தால் இந்த ஐ.டி.ஆர்ஐ நீங்கள் பதிவு செய்ய வேண்டும்:

 • அறிவியல் ஆராய்ச்சி சங்கம்.
 • செய்தி நிறுவனம்
 • பிரிவு 10 (23ஏ) இல் குறிப்பிடப்பட்டுள்ள சங்கம் அல்லது நிறுவனம்.
 • பிரிவு 10 (23பி ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம்.
 • நிதி அல்லது நிறுவனம் அல்லது வேறு கல்வி நிறுவனம் அல்லது எந்த மருத்துவமனை அல்லது பிற மருத்துவ நிறுவனம்.
 • உங்கள் வருமானம், அறக்கட்டளையின் கீழ் அல்லது தொண்டு அல்லது மத நோக்கங்களுக்கான  அல்லது அத்தகைய நோக்கங்களுக்காக மட்டுமே பிற சட்டபூர்வ கடமைகளில் இருந்து பெறப்பட்டிருந்தால்.

உங்கள் வியாபாரத்தின் வகையைப் பொறுத்து, முன்னர் குறிப்பிடப்பட்ட வடிவங்களிலிருந்து , குறிப்பிட்ட வகை ஐ.டி.ஆர் படிவம் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐ.டி.ஆர் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

 1. இலாப மற்றும் நஷ்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு.
 2. கணக்குகளின் புத்தகங்கள் (பொருந்தினால்)
 3. வங்கி அறிக்கைகள்.
 4. வருடாந்திர  விற்பனைப் பதிவுகள் அல்லது அனைத்து விற்பனை விவரங்கள்.
 5. வருடத்தின் கொள்முதல் பதிவு அல்லது அனைத்து கொள்முதல் விவரங்கள் (மூலதன சொத்து உட்பட).
 6. (TDS) டி.டி.எஸ் சான்றிதழ் / படிவம் 16ஏ  (கிடைத்தால்)
 7. வாட்  வரி வருமானம் / சேவை வரி வருமானம்
 8. பதிவுச்  சான்றிதழ்
 9. வணிகம்  தொடர்பான செலவு விவரங்கள்
 10. வணிக வருமானம் (மூலதன ஆதாயம், சம்பளம், வாடகை, வட்டி, முதலியன) தவிர வேறு வருமான விவரங்கள்.
 11. வரி சேமிப்பு  முதலீடுகள் ஆதாரங்கள்.
 12. துல்லியமான மற்றும் உடனடி அணுகலுக்காக, வணிகக் கணக்கியல் மென்பொருள் மூலம் வணிகத் தரவை பராமரிக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. உங்களிடம் எந்த மென்பொருளும்  இல்லையென்றால், இந்திய வணிகங்களுக்கான சிறந்த ஜிஎஸ்டி-இணக்கமான கணக்கியல் மென்பொருள் வியாபார் – ஐப் பயன்படுத்த ஆரம்பிக்கவும். இலவச சோதனைக்கு இப்போது பதிவிறக்கவும்.

ஹாப்பி வியாபாரிங்!!!

You May Also Like

Leave a Reply