களைப்பைத்தரும் கைமுறை வணிக கணக்கியல் செயல்முறைகளிலிருந்து விடுதலை வேண்டுமா?

ஒரு சிறிய வணிக உரிமையாளராக இருந்து உங்கள் வணிக கணக்கியலை எந்தவொரு வணிக மென்பொருளும் இல்லாமல் நீங்களாகவே கைமுறையாக நிர்வகித்துக் கொண்டிருந்தால் இந்நேரம் நிச்சயமாக  நீங்கள் விரக்தியடைந்திருப்பீர்கள்! உண்மையாக சொல்லப்போனால் கணக்கியலை கைமுறையாக பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் உங்கள் வணிகத்தில் நேரம் செலவிடுவதை காட்டிலும் வணிக கனக்கியலுக்கே அதிகம் நேரம் செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் கணக்கியலை கைமுறையாக செய்வதற்கு  நீங்கள் ஒன்றும் 1960 -களில் இல்லை. காகிதம் மற்றும் புத்தகங்களின் கணக்கியல் அடுக்குகளிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும், ஏனென்றால் நாமாக கைமுறையாக மேற்கொள்ளும் இந்த முறையில் வணிக பரிவர்த்தனைகள் அனைத்தும் நாள் மற்றும் இரவு கணக்காக நாமே சுயமாக மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

களைப்படைய வைக்கும் கைமுறை வணிக கணக்கியல் செயல்முறைகளிலிருந்து விடுதலை அடைவதற்கான நேரம் இது. ஏனெனில்,

  • ஒவ்வொரு முறையும் கணக்கியலை கைமுறையாக மேற்கொள்ளும்போது அடிக்கடி பிழையான எண்களை உள்ளிட்டு கணக்கியல் இருப்பில் தவறு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான், அதை மீண்டும் சரிபார்ப்பது அதைவிட நேரத்தை  வீண் செய்யும் வேலையாகும். இதனால் மீண்டும் முதலிலுருந்து அனைத்து செயல் முறையையும் செய்ய நேரிடும்.

அதேசமயம், வியாபார் போன்ற மென்பொருளானது  கணக்கியல் மற்றும் எந்த சரிபார்த்தலையும் சிலநொடிகளில் கையாண்டு உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தி உங்கள் வணிகத்தின்  மற்ற பயன்பாடான காரியங்களுக்கு உங்கள் நேரத்தை செலவிடுவதற்கு வழிவகுக்கிறது.

  • உங்கள் கணக்கியல் புத்தகங்களை தொலைப்பது என்பது பொதுவானது, அதுமட்டுமில்லாமல் பலநேரங்களில் அது கிழிந்தோ அல்லது சேதமடைந்தோ போகலாம். இவ்வாறான சமயங்களில் சில முக்கிய கணக்கியல் பரிவர்த்தனைகளை நீங்கள் இழக்க நேரிடும் மற்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளப்படுவீர்கள். அந்த பரிவர்த்தனைகளுக்கான எந்த ஆதாரமும் உங்களிடத்தில் இருக்க போவதில்லை, நீங்களே இறுதியில் பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். மறுபடியும் அந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கிய புத்தகத்தை உருவாக்குவது கனவில் கூட முடியாத கடினமான வேலையாகும்.

இதுவே டிஜிட்டல் மென்பொருளில் சேமித்த தரவானது எந்த நிலையிலும் பாதிக்கப்படாது. மற்றும்  வியாபார் போன்ற வணிக மென்பொருளைக் கொண்டு, உங்கள் வணிக சம்பந்தப்பட்ட தரவுகளை பாதுகாப்பது மட்டுமின்றி  பல காப்பு பிரதிகளையும் எடுக்க முடியும், உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரதிகளை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் சேமித்து வைக்கவும் முடியும். இத்தகைய தகவல்களை  கைமுறையாக செய்வதென்பது நேரம் எடுத்துக்கொள்ளும் செயலாகும்.

  • உங்கள் கணக்காளர்கள், ஒரு  ஒழுங்குபடுத்தபட்டுள்ள தரவுகளையே பார்க்க விரும்புகிறார்கள்  இல்லையெனில் கணக்கு நிலுவைகளை சரிபார்த்து, மீளாய்வு செய்வது அவர்களுக்கு  கடினமாகி விடும். ஒழுங்கற்ற தரவு அவர்களுக்கு தேவைப்படும் தகவலை கண்டுபிடிப்பதற்கு  பல ரசீதுகளை பார்வையிடும்படி ஆக்கிவிடும்.

இந்த வகையான கைமுறை கணக்கியல் செயல்பாடுகளுக்கு  நிறைய நேரம் தேவைப்படுவதால் அவர்களின் கட்டணமும் அதிகரிக்கும். சரியான கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்துவது என்பது கணக்காளர்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் ஒன்றாகும், இதனால் நேரம், முயற்சி மற்றும் பணத்தையும் சேமிக்க இயலும்!

கைமுறை காகித செயல்பாட்டிலுருந்து விடுபடுங்கள்!

டிஜிட்டலாக்கத்திற்கு மாறுங்கள். வியாபார்-ஐ பயன்படுத்தங்கள்!

வியாபார், சிறந்த வணிக கணக்கியல் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும் >>

ஹாப்பி வியாபாரிங்!!!

You May Also Like

Leave a Reply