சமீபத்திய ஜிஎஸ்டி வரிவிகித மாற்றங்கள்:

 

விவரங்கள் முந்தைய ஜிஎஸ்டி

விகிதம்

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி

விகிதம்

தலைப்பு 3208/3209/3210 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பெயிண்ட்ஸ் மற்றும் தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகிற ஒரு வகை நீர் நிறமி வார்னீஷுகள். 28% 18%
தலைப்பு 3214 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கிளாசியர்ஸ் புட்டி, க்ராஃப்ட்டிங் புட்டி, ரெசின் சிமெண்ட், கால்கிங் காம்பௌண்ட்ஸ் மற்றும் பிற மரப்பிசின்கள், பெயிண்ட்டர்ஸ் ஃபில்லிங்ஸ், மீவெப்பம் தாங்கு பூச்சு தயாரிப்புகள் முதலியன. 28% 18%
தலைப்பு 8418 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, குளிர்சாதன பெட்டிகள், உறைவிப்பான்(ஃபிரீஸர்) மற்றும் மற்ற குளிர்பதன பெட்டி,உறைவிப்பான் உபகரணங்கள்,  எலெக்ட்ரிக் மற்றும் பிற; ஏர் கண்டிஷனிங் இயந்திரங்களைத் தவிர மற்ற வெப்ப குழாய்கள். 28% 18%
தலைப்பு 8450 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, வீட்டு அல்லது சலவை வகை இயந்திரங்கள், சலவை மற்றும் உலர்த்தி கொடுக்கும் இரண்டையும் உள்ளடக்கிய இயந்திரங்கள், ஆகியவை 28% 18%
8507 60 00 என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள். 28% 18%
8508 ஆம் தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள வாக்யூம் கிளீனர்கள் 28% 18%
8509 யு/எச்-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, மற்றும் 8508(கல்லைக் கொண்டிருக்கும் அரவை இயந்திரத்தை தவிர) தலைப்பில் உள்ள வாக்யூம் கிளீனர்கள் தவிர்த்து சுய கட்டுப்பாட்டு மின் மோட்டார்களைக் கொண்டு இயங்கும் மின் இயந்திர வீட்டு உபகரணங்கள் முதலியன. 28% 18%
யூ/எச் 8510 -ன் வகைப்படுத்தப்பட்டுள்ள சுய கட்டுப்பாட்டு மின் மோட்டார்களைக் கொண்டு இயங்கும் ஷேவேர்ஸ், ஹேர் கிளிப்பர்ஸ் & ரிமூவிங் அப்ளையன்சஸ் போன்றவை 28% 18%
8516 தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள மின்சார சுடுதண்ணி பொறி(எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்) மற்றும் அமிழ் நீர் சூடேற்றி(இம்மெர்ஸன் ஹீட்டர்ஸ்) மின் தெர்மிக் ஹேர்-டிரஸ்ஸிங் மெஷின் மற்றும் ஹேண்ட் ட்ரையர்ஸ்;  மின்சார வெப்பமூட்டும் கருவி; மின்சார இஸ்திரி, மின்சார வெப்பமூட்டும் மின் தடைச் சாதனம் (எலக்ட்ரிக் ஹீட்டிங் ரெசிஸ்டர்ஸ்) 8545 என்ற தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளதை தவிர்த்து. 28% 18%
தலைப்பு 8528 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, திரை அளவு 68 செ.மீ மிகாமல் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள் (எல்சிடி அல்லது எல்ஈடி உள்ளடக்கியவை ) 28% 18%
8705 என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நோக்கத்திற்கான மோட்டார் வாகனங்கள், நபர்கள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்கு என்று முக்கியமாக வடிவமைக்கப்பட்டவைகளை தவிர. 28% 18%
தலைப்பு 8709 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, சரக்குந்து சுமைவண்டிகள், தொழிற்சாலைகள், கிடங்குகள், கப்பல்துறைப் பகுதிகள் அல்லது விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் தூக்குதல் அல்லது கையாளுதல் அல்லாத சுய-உந்துதலுடன் செயல்படும்  வகையிலான உபகரணங்கள்; ரயில்வே நிலையத் தளங்களில் பயன்படுத்தப்படும் வகை டிராக்டர்கள்;மற்றும் மேலே கூறப்பட்ட வாகனங்களின் பகுதிகள் ஆகியவை 28% 18%
8716 தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இழுவை வண்டிகள் மற்றும் பகுதி பாரவண்டிகள் (டிரெய்லர்கள் மற்றும் அரை டிரெய்லர்கள்);மற்ற வாகனங்கள்; இயந்திரங்கள் பயன்படுத்தி இயக்கப்படாதவை; அவற்றின் பாகங்கள் [வேளாண் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தானே பளுஏற்றல் அல்லது தானே பளு இறக்கும் டிரெய்லர்கள், கையால் இயக்கப்படும் வாகனங்கள், கால்நடைகளால் இயக்கப்படும் வாகனங்கள் தவிர,] 28% 18%
பிரிவு 87 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் மின்கல மோட்டார் வாகனங்கள் 28% 12%
தலைப்பு 96190010/96190020 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார துண்டுகள் (பட்டைகள்) அல்லது சுகாதார நாப்கின்கள், டாம்பன்கள். 12% NIL
2207 தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் ஆற்றலுடன் கலப்பதற்காக(பெட்ரோல்) எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எத்தைல் ஆல்கஹால். 18% 5%
தலைப்பு 2809 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள உரம் தர பாஸ்போரிக் அமிலம் (ஃபெர்டிலைஸர் க்ரேட் பாஸ்போரிக் ஆசிட்). 12% 5%

To read this blog in English CLICK HERE >>

ஹாப்பி வியாபாரிங்!!!vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

You May Also Like

Leave a Reply