அம்சம் #1
பிரான்ஸ் தான் ஜிஎஸ்டி – ஐ (GST) 1954 இல் முதலில் அறிமுகப்படுத்திய நாடாகும்.
பிரான்சில் ஜி.எஸ்.டி ஆட்சியை அமல்படுத்துவதற்கான முக்கிய நோக்கம், அதிக வரி விகிதங்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்ததன் விளைவாக ஏற்பட்ட வரி ஏய்ப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆகும்.
அம்சம் #2
சுமார் 17 ஆண்டுகளாக இந்தியாவில் ஜி.எஸ்.டி பற்றிய கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது .
இந்தியாவில் முதலில் ஜிஎஸ்டி பற்றிய பேச்சுவார்த்தை 1999 ல் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயி மற்றும் அவரது பொருளாதார ஆலோசனைக் குழு இடையே நடந்ததாகும்.
அம்சம் #3
உலகில் மொத்தம் 160 நாடுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ளது .
இந்தப் பட்டியிலில் 161 வது நாடாக இந்தியா ஜிஎஸ்டி ஐ(GST) ஏற்றுக்கொண்டு, ஜூன் 30 நள்ளிரவில் ஜிஎஸ்டி ஐ(GST) நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்தியது ,
அம்சம் #4
மது , பெட்ரோல், மின்சாரம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி- யிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,, பெட்ரோல், மின்சாரம், மது மூன்றும் ஏற்கனவே இருக்கும் மாநில வரி விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும்.
அம்சம் #5
சிகரெட், பீடிஸ், புகையிலை ஆகியவை ஏற்கனவே இருக்கும் வரிகள் மற்றும் அத்துடன் ஜிஎஸ்டி – யும் அடங்கும்.
அம்சம் #6
ரூ 5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்வது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.
முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் அரசாங்கம் 5 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்வது பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவித்துள்ளது, எந்த வித வாரண்ட்டும் இன்றி கைது செய்ய காவல் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.
அம்சம் #7
20 லட்சம் மற்றும் அதற்கும் மேல் வருவாய் ஈட்டும் வணிகம் ஜிஎஸ்டி – ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
20 லட்சத்திற்க்கும் கீழ் வருவாய் ஈட்டும் வியாபாரங்கள் (வட கிழக்கு மாநிலங்களுக்கு ரூ .10 லட்சம்) ஜி.எஸ்.டியில் பதிவு செய்ய தேவையில்லை.
அம்சம் #8
ஜிஎஸ்டி வருகையினால் நுழைவு வரி மாற்றப்பட்டது.
ஜிஎஸ்டி – ன் வருகையால் ,சரக்கு வண்டிகளுக்கு விதிக்கப்படும் நகர் சுங்கவரி மற்றும் உள்ளுர் வரியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. இதனால் வர்த்தகர்கள் தங்களது வணிகம் மிகவும் எளிதாக இருக்கும் என மகிழ்கிறார்கள்.