ஜி.எஸ்.டி மூலம் நுகர்வோர் மீது குறைவான சுமையைச் செலுத்த வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.

ஜி.எஸ்.டி மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதங்களில் நிதி அமைச்சரான பியுஷ் கோயல் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜிஎஸ்டி கவுன்சில் 384 பொருட்கள் மற்றும் 68 சேவைகளின் மீதான வரிவிகிதங்களைக் குறைத்துள்ளது. “186 பொருட்கள் மற்றும் 99 சேவைகளுக்கு  ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். மேலும், ஜிஎஸ்டி-யிலிருந்து சுகாதார நாப்கின்களுக்கு முற்றிலும்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தில்(ஐஎம்எஃப்) இந்தியாவின் அண்மை கால வளர்ச்சியை முன்னறிவிப்பாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த முன்னறிவிப்பை விட சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

2019-2020 நிதியாண்டில் 7.5 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று  எதிர்பார்க்கப்படுறது. “பிரதம மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மீண்டும் தங்கப் பறவையாக மாறும் என்று இப்போது உலகம் முழுதும் நம்புகிறது” என்று அமைச்சர் கூறினார். மேலும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி அறிமுகம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவிற்கும் உலகின் ஏனைய பகுதிகளும் இதனால் நன்மையடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம்: தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்

உங்கள் வணிகம் இன்னும் ஜிஎஸ்டி இணக்கமாக இல்லையா? வியாபார் ஜிஎஸ்டி பயன்பாட்டை  பயன்படுத்த இங்கே கிளிக் செய்யவும் >>

ஹாப்பி வியாபாரிங்!!!

You May Also Like

Leave a Reply