ஜூலை 31 ம் தேதிக்கு முன்னர் ஐ.டி.ஆர் பதிவுசெய்தல்:  சிறிய அல்லது நடுத்தர தொழில் வர்த்தகர்களுக்குத் தெரிய வேண்டியது என்னென்ன ?

July 31st, ITR, return filing

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட ஒரு வியாபாரத்தை நீங்கள் நடத்துகிறீர்களா? அல்லது நீங்கள் 25 லட்சத்திற்கும் அதிகமான சுய-வருமானம் சம்பாதிக்கிறீர்களா?  இதில் ஏதேனும் ஒன்றாக இருப்பின், ஜூலை 31 ம் தேதி உங்களுக்கான ஒரு முக்கியமான தேதியாக மாறிவிடும்,    நீங்கள் ஐ.டி.ஆர் (ITR) பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்:

ஒரு தகுதிவாய்ந்த பட்டய  கணக்காளரை கொண்டு வரி தணிக்கை செய்துகொள்ளுங்கள்   

உங்களின் வருமானம் உங்கள் தொழிலில் இருந்து  வருமானால்:

நீங்கள் ஒரு  நிதி ஆண்டில் 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றிருந்தால், வரி தணிக்கை கட்டாயமாகும்.

ஆனால் உங்கள் வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு  கீழ் இருந்தால், உங்கள் மொத்த வருவாயில் , வருமான வரி 50% செலுத்தப்பட வேண்டும், இல்லையெனில், ஒரு தணிக்கை தேவைப்படுகிறது.

உங்கள் வணிகத்திலிருந்து வரும் வருமானமாக இருந்தால்:

நீங்கள் ரூபாய்  2 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒரு தொழிலதிபரானால் ,நீங்கள் தணிக்கை கட்டாயமாக செய்துகொள்ளவேண்டும் .

ஆனால் ஒரு தொழிலதிபராக உங்களின்  வருமானம் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால், வியாபாரத்தின்  மொத்த வருமானத்தில் 8% வருமான வரி செலுத்தப்பட வேண்டும், இல்லையெனில், ஒரு தணிக்கை தேவைப்படுகிறது.

தணிக்கையின் நோக்கம் வரிக்குரிய வருமானத்தை தீர்மானிப்பது ஆகும் .

வியாபார்  போன்ற வணிகக் கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தி டிஜிட்டல் கணக்கில் நீங்கள்   கணக்கை வைத்திருந்தால், இது ஒரு பிரச்சனையாக இருக்காது .

வருமான வரிச் சட்டத்தின் கீழ் தணிக்கைச் செய்யப்பட்ட பிறகே   வரி செலுத்தப்படவேண்டும் . அதன்பிறகு, நிதி ஆண்டில் மொத்த வருமானத்திற்கான  வரி தணிக்கை செய்த பிறகு வருவாய் வரி வருமானம் (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்யப்பட வேண்டும்.  

வரித் தணிக்கைக்கு உட்பட்ட அனைத்து வணிகங்களுக்கும் தொழில்களுக்கும் ,வருவாய் வரி வருமானத்துடன் தணிக்கை அறிக்கைகளை இ –  பைலிங் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

உங்கள் ஐ.டி.ஆர் ஐ தாக்கல் செய்வது :

குறிப்பிட்ட நிலைமைகளைப் பொறுத்து வணிகர்களுக்கான ஐ.டி.ஆர் பதிவு செய்ய பல்வேறு வடிவங்கள் உள்ளன.வணிக மற்றும் தொழிற்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஐ.டி.ஆர்-3, ஐ.டி.ஆர்-4, ஐ.டி.ஆர்-5, ஐ.டி.ஆர்-6 மற்றும் ஐ.டி.ஆர்-7 ஆகியவற்றை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

எந்த ஐ.டி.ஆர்  எதற்கு தாக்கல் செய்வது என்பது தெரியாமல் இரு க்கிறீர்களா ? இதை பாருங்கள்:

ஐ.டி.ஆர்-3 :

பின்வரும் ஆதாரங்களில் இருந்து வருமானம் கொண்டவர்கள் ஐ.டி.ஆர்-3 தாக்கல்  செய்யலாம்.

 • தனியுரிமை வணிகம்  அல்லது தொழில்.
 • கூடுதலாக,  வீடு சொத்திலிருந்து வரும் வருமானம் , சம்பளம் / ஓய்வூதியம் மற்றும் இதர ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் ஆகியவையும் அடங்கும்.

ஐ.டி.ஆர்-4:

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ஏ டி , பிரிவு 44ஏ டி ஏ  மற்றும் பிரிவு 44ஏ இ ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் நம்பத்தகுந்த வருமானத்தினைத் தேர்ந்தெடுத்திருந்தால் இந்த ஐ.டி.ஆர் ஐ  தாக்கல் செய்யுங்கள். இருப்பினும், உங்கள் வியாபாரத்தின் வருவாய் 2 கோடி ரூபாவைக் கடந்துவிட்டால், நீங்கள் Iஐ.டி.ஆர்–3 ஐ பதிவு செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர் -5:

ஐ.டி.ஆர் 5 ஐ , நிறுவனங்கள், எல்.எல்.பீ.ஸ் (லிமிடெட் லியபிலிட்டி  பார்ட்னர்ஷிப்), ஏஓபிஸ் (அஸோசியேஷன் ஆஃப் பெர்சன்ஸ்) மற்றும் பி .ஓ .ஐஸ்   (பாடி ஆஃப் இண்டிவிஜூவல்ஸ் ) போன்ற நிறுவனங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும் .

ஐ.டி.ஆர் -6:(இந்த வருவாயை மின்னணு முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்)

பிரிவு 11-ன் கீழ் விலக்கு அளிப்பதாகக் கூறும் நிறுவனங்களைத்  தவிர மற்ற நிறுவனங்கள் (தொண்டு அல்லது மத காரணங்களுக்காக பயன்படுத்தும் சொத்துக்களிருந்து வரும் வருமானம்)  .

ஐ.டி.ஆர் -7:

கீழே உள்ள ஏதேனும் ஒன்றை நீங்கள் சார்ந்திருந்தால் இந்த ஐ.டி.ஆர்ஐ நீங்கள் பதிவு செய்ய வேண்டும்:

 • அறிவியல் ஆராய்ச்சி சங்கம்.
 • செய்தி நிறுவனம்
 • பிரிவு 10 (23ஏ) இல் குறிப்பிடப்பட்டுள்ள சங்கம் அல்லது நிறுவனம்.
 • பிரிவு 10 (23பி ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம்.
 • நிதி அல்லது நிறுவனம் அல்லது வேறு கல்வி நிறுவனம் அல்லது எந்த மருத்துவமனை அல்லது பிற மருத்துவ நிறுவனம்.
 • உங்கள் வருமானம், அறக்கட்டளையின் கீழ் அல்லது தொண்டு அல்லது மத நோக்கங்களுக்கான  அல்லது அத்தகைய நோக்கங்களுக்காக மட்டுமே பிற சட்டபூர்வ கடமைகளில் இருந்து பெறப்பட்டிருந்தால்.

உங்கள் வியாபாரத்தின் வகையைப் பொறுத்து, முன்னர் குறிப்பிடப்பட்ட வடிவங்களிலிருந்து , குறிப்பிட்ட வகை ஐ.டி.ஆர் படிவம் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐ.டி.ஆர் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

 1. இலாப மற்றும் நஷ்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு.
 2. கணக்குகளின் புத்தகங்கள் (பொருந்தினால்)
 3. வங்கி அறிக்கைகள்.
 4. வருடாந்திர  விற்பனைப் பதிவுகள் அல்லது அனைத்து விற்பனை விவரங்கள்.
 5. வருடத்தின் கொள்முதல் பதிவு அல்லது அனைத்து கொள்முதல் விவரங்கள் (மூலதன சொத்து உட்பட).
 6. (TDS) டி.டி.எஸ் சான்றிதழ் / படிவம் 16ஏ  (கிடைத்தால்)
 7. வாட்  வரி வருமானம் / சேவை வரி வருமானம்
 8. பதிவுச்  சான்றிதழ்
 9. வணிகம்  தொடர்பான செலவு விவரங்கள்
 10. வணிக வருமானம் (மூலதன ஆதாயம், சம்பளம், வாடகை, வட்டி, முதலியன) தவிர வேறு வருமான விவரங்கள்.
 11. வரி சேமிப்பு  முதலீடுகள் ஆதாரங்கள்

துல்லியமான மற்றும் உடனடி அணுகலுக்காக, வணிகக் கணக்கியல் மென்பொருள் மூலம் வணிகத் தரவை பராமரிக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. உங்களிடம் ஒன்று இல்லையென்றால், இந்திய வணிகங்களுக்கான சிறந்த ஜிஎஸ்டி-இணக்கமான கணக்கியல் மென்பொருள்  வியாபார் – ஐப் பயன்படுத்த ஆரம்பிக்கவும். இலவச சோதனைக்கு இப்போது பதிவிறக்கவும்.

ஒரு  வணிகத்தின்   வருமான வரி வருவாயைத் தாக்கல் செய்வதற்கான தேதிகள்:

நீங்கள் ஒரு  நிறுவனம் அல்லது எல்.எல்.பீ இல் பணிபுரியும் பங்குதாரராக  இருந்தால்,

31 ஜூலை தணிக்கை  அல்லாத வழக்குகளுக்கு  இறுதி நாள்

30 செப்டம்பர் தணிக்கை வழக்குகளுக்கு காலக்கெடுவாகும்.

ஒரு கூட்டு நிறுவனம் மற்றும் எல்.எல்.பீ க்கு,

31 ஜூலை    தணிக்கை அல்லாத வழக்கிற்கான காலக்கெடுவாகும்.

செப்டம்பர் 30 தணிக்கை வழக்குகளுக்காகும் .

இறுதியாக,  அறக்கட்டளைகளுக்கு ,

31 ஜூலைதணிக்கை அல்லாத ஐ.டி.ஆர்-ஐ தாக்கல் செய்ய கடைசி நாள்.

செப்டம்பர் 30 தணிக்கை வழக்குகளுக்காகும் .

மொத்தத்தில், தணிக்கை வழக்குகள்
30 செப்டம்பர் வரை தாக்கல் செய்யலாம், மற்றவர்கள் ஜூலை 31 ஆம் தேதி முன் தாக்கல் செய்ய வேண்டும்.

கடைசியாக, உங்கள் காலக்கெடுவை நீங்கள் நெருங்குகிறீர்கள் என்றால்  ,தாமதமாகுவதற்கு முன் வேகமாக செயல்பட வேண்டும்.

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply