புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செயல்முறை தாமதமானது

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதென்பது எப்போதும் ஒரு கடினமான வேலைதான்! இல்லையா ?

அதிர்ஷ்டவசமாக,  புதிய எளிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்யும் படிவங்களைக் கொண்டு அந்த செயல் முறையை சுலபமாக்குவதற்கு  நமது அரசாங்கம் உறுதியளித்தது. இது ஏப்ரல் 1, 2019 -ல் இருந்து உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் இன்னும் வரவில்லை. அது தாமதமாகிவிட்டது!

புதிய மென்பொருள் அமைப்பானது 100% தயாராகிய பிறகு, புதிய தேதி முடிவு செய்யப்படும்.

புதிய செயல்முறை என்னவாக இருக்கும்?

  • உங்கள் வருடாந்திர வருவாய் ரூ.5 கோடியாக இருப்பின்,  ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யத் தேவையில்லை. சுகம் & சஹஜ் என்ற இந்த இரண்டு படிவங்களில் ஒன்றை  3 மாதங்களுக்கு (காலாண்டு அடிப்படையில்) ஒருமுறை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
  • சஹஜ்” என்ற ரிட்டர்ன் படிவமானது  B2C வணிகத்திற்கானது.

அதாவது நுகர்வோருக்கு விநியோகிக்கிற வணிகர்களுக்கானது.

  • சுகம்” என்ற ரிட்டர்ன் படிவமானது B2B வணிகத்திற்கானது., பிற வணிகங்களுக்கு விநியோகிக்கக்கூடிய வணிகத்திற்கும் மற்றும்  நுகர்வோர்களுக்கும் இது பொருந்தும்
  • எப்படியும் நீங்கள் ஜிஎஸ்டிஆர் 3பி -ஐ பதிவு செய்ய வேண்டும்.
  • நிதி ஆண்டின் ஏதாவதொரு காலாண்டில், உங்களிடம் எந்த கொள்முதலும்,  வெளியீட்டு வரி பொறுப்புகளும், மற்றும் உள்ளீட்டு வரி கடன்கள் ஏதுமில்லையெனில்,  அந்த முழு காலாண்டிற்கும் இன்மை விவர அறிக்கையை (Nil’ return) மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது
  • ஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட இனி  நீங்கள் ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். சரி, கேட்பதற்கே எளிதாக இருக்கிறதல்லவா!

இதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

  • ஜிஎஸ்டி ரிட்டர்னை  தாக்கல் செய்வது இனி சிறு வணிகங்களுக்கு சுலபமாக & எளிதாக  இருக்கும்.
  • மேலும் இணக்கப் பிரச்சினைகள் ஏதுமிருக்காது!
  • விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் விலைப்பட்டியல்(invoice) எளிதாக பொருத்தப்பட முடியும்.

நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதை கீழே கமெண்ட் செய்யவும்.

ஹாப்பி வியாபாரிங்!!!vyaparapp, business accounting, invoicing app. billing, create invoice

You May Also Like

Leave a Reply