வணிகங்கள் எந்த தாமதமும் இல்லாமல் ஜி.எஸ்.டி.ஆர் -9 தயாரிக்கத் தொடங்க வேண்டும்.

மே மாதம் முடிந்துவிட்டது! ஜூன் வந்துவிட்டது!  உங்களைப் போன்ற ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை:

✔ 2017-18 நிதியாண்டிற்கான  ஜி.எஸ்.டி.ஆர் -9 ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30 ஜூன் 2019 ஆகும்.

✔ நீங்கள் ஒரு கலவை திட்ட வரி செலுத்துவோர் அல்லது இ-கமெர்ஸ் ஆப்பரேட்டர் என்றால், நீங்கள் (ஜி.எஸ்.டி.ஆர் -9 அல்லாத) மற்றொரு படிவத்தை பயன்படுத்தி வருடாந்திர வருமானத்தை பதிவு செய்ய வேண்டும்.

✔ உங்கள் ஆண்டு வருமானம் ரூ 2 கோடிக்கு மேல் என்றால், நீங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -9 உடன் இணைந்து ஜி.எஸ்.டி.ஆர் -9சி  -யையும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி.ஆர் -9 -ஐ தாக்கல் செய்ய என்ன வேண்டும்?

✔ ஜி.எஸ்.டி.ஆர் -9 -ஐ தாக்கல் செய்வது எளிதல்ல! தொடக்கத்தில் இருந்து உங்கள் வணிகத்தின் வியாபார பரிவர்த்தனைகளை முழுவதுமாக சரிபார்க்கவும் வேண்டும்.

✔ ஜி.எஸ்.டி.ஆர் -9 -ல், சில அட்டவணைகள் தானாக நிரப்பிக்கொள்ளும், ஆனால்  முன்னர் பதிவு செய்த ஜி.எஸ்.டி.ஆர்-1 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி  -ஐ பயன்படுத்தி சிலவற்றை கைமுறையாக நாமே நிரப்ப வேண்டும்.

✔ நீங்கள் செலுத்திய வரிகள், உங்கள் விற்பனையாளர்களின் கணக்கு வழக்குகள் உங்கள் கணக்கு புத்தகங்கள், மற்றும் உங்கள் ஜி.எஸ்.டி.ஆர்-9 ஆகிய அனைத்திலும்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள வருமானம் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்! அதாவது நீங்கள் மேற்கூறிய அனைத்து ஆவணங்களிலும் காட்டியுள்ள தரவு ஒன்றுக்கொன்று முற்றிலும் பொருந்த வேண்டும்.

✔ உங்கள் கணக்கு புத்தகங்கள்  மற்றும் ஜி.எஸ்.டி.ஆர் -9 இடையே ஏதாவது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -9 தாக்கல் நிராகரிக்கப்படும்.

✔ உங்கள் ஜி.எஸ்.டி.ஆர்-9 -ல் தவறுகள் இருப்பின் நீங்கள் வருமான வரித் துறையிலிருந்து அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

✔ நீங்கள் ஆன்லைன் வரிகளை செலுத்தியுள்ளீர்கள், ஆனால்  ஜி.எஸ்.டி.ஆர் -3பி -ல் தவறுகள் செய்திருந்தால், உங்கள் ஜி.எஸ்.டி.ஆர் -9  தவறான தரவோடு தானாகவே நிரப்பபட்டிருக்கும்.

✔ பி2பி விற்பனை மற்றும் பி2சி ஆகியவை ஜி.எஸ்.டி.ஆர்-1 மூலம் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், இப்போது அதை மாற்ற முடியாது.

✔ இவ்வாறு  நடக்கும் முன்னரே தவறுகளை அடையாளம் காண, உங்கள் வணிகத் தரவுகளை டிஜிட்டல் பிரதியாக  நீங்கள் பராமரிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு புத்தகங்களில் ஆயிரம் பரிவர்த்தனைகளை மீண்டும் தொடக்கத்திலிருந்து சரிபார்க்கும்படியான கடினமான நிலை உங்களுக்கு ஏற்படும்.

✔ ஒருவேளை, வியாபார் (இங்கே பதிவிறக்கம் செய்யவும்) போன்ற சிறப்பான வணிகக் கணக்கியல் மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது விரைவில் இது போன்ற வருமான வரிக்கான படிவங்களை தாக்கல் செய்கையில் ஏற்படும் தவறுகளை விரைவாக கண்டறிந்து உங்களை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்துக்கொள்ள உதவும்.

✔ ஜி.எஸ்.டி.ஆர் -9  ஐ பயன்படுத்தி கூடுதல் ஐ.டி.சி நீங்கள் கோர முடியாது.

✔ ஜி.எஸ்.டி.ஆர் -9 ஐ தாக்கல் செய்வதற்கு முன் அரசுக்கு நிலுவையிலுள்ள வரி செலுத்த வேண்டும் என்றால், அது தவறாமல் செலுத்திவிட  வேண்டும்.

✔ மேலும் எந்த தாமதமும் இல்லாமல் ஜி.எஸ்.டி.ஆர் -9  -ஐ தயாரிக்க தொடங்குவோம்! ஜி.எஸ்.டி.ஆர் -9 காலக்கெடுவிற்கு முன்பாக உங்கள் எல்லா சிக்கல்களையும் விரைவாக தீர்க்கவும்.

✔ ஜி.எஸ்.டி.ஆர் -9 வெற்றிகரமாக தாக்கல் செய்வது, வரவிருக்கும் ஆண்டுகளில் எந்த ஒரு சிக்கலுமின்றி, மன அழுத்தம் இல்லாத வணிகத்தை நீங்கள் மேற்கொள்ள உங்களுக்கு உதவும்.

✔சமீபத்திய ஜி.எஸ்.டி செய்திகளை பெற www.vyaparapp.in என்ற வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்

சமீபத்திய GST செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.vyaparapp.in என்ற இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

ஆதாரம்: தி எகனாமிக் டைம்ஸ்

ஹாப்பி வியாபாரிங் !!!

You May Also Like

Leave a Reply