வியாபார் டெஸ்க்டாப் ஆப் – ஐ விண்டோஸிற்க்கான நிறுவல் வழிகாட்டி

GST Accounting App, GST, GST Accounting App, INventory App, Invoicing App, Free GST App, INvoices

சுருக்கம்:

இந்த வழிகாட்டி உங்கள் கணினியில் வியாபார் டெஸ்க்டாப் ஆப் – ஐ எவ்வாறு நிறுவலாம் என்பதை படி படியாக விளக்குகிறது.

 

1. கண்ணோட்டம்

வியாபார் டெஸ்க்டாப் ஆப் – ஜிஎஸ்டி உடன் கூடிய கணக்கியல் , விலைப்பட்டியல் & சரக்குகளுக்கான மென்பொருள் – உங்கள் வர்த்தக கணக்கு மற்றும் ஜிஎஸ்டி தாக்கல் எளிதாக செய்ய உருவாக்ப்பட்டுள்ளது.இந்த ஆப் நீங்கள்  விலைப்பட்டியல் அனுப்பவும் செலவினங்களை நிர்வகிப்பது, சரக்குகளைத் தணிக்கை செய்வது, அறிக்கைகள் உருவாக்குதல், ஜி.எஸ்.டி வருமானம் மற்றும் இன்னும் பல வணிக கணக்கியல் சார்ந்த செயல்களை சிரமமின்றி நிர்வகிப்பதில் திறன் வாய்ந்தது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள  அம்சங்கள் அடங்கும் – நிபுணத்துவ பற்றுச்சீட்டுகள், பங்கு மேலாண்மை, பணம் நினைவூட்டல்கள், தானியங்கு காப்பு பிரதி மற்றும் பல.மேலும் பார்க்க www.vyaparapp.in இணையதளத்தை அணுகவும்.

2.விண்டோஸ் இல் வியாபார் டெஸ்க்டாப்   ஆப்- ஐ நிறுவுதல்

2.1. கட்டாய கணினி தேவைகள்(குறிப்பு: தற்போது விண்டோஸ் இயந்திரத்தில் மட்டுமே வியாபார் டெஸ்க்டாப்  ஆப் பயன்படுத்த முடியும்)

சுமூகமாக இயக்க எங்கள் பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வன்பொருள் விவரக்குறிப்பு:(ஹார்ட்வர் ஸ்பெசிபிகேஷன் )

 • ஓஎஸ்: விண்டோஸ் 7 அல்லது அதற்கு மேல்.
 • ரேம்: 2 ஜிபி மற்றும் அதற்கு மேல்.
 • ஹார்ட் டிஸ்க்: 10 ஜிபி மற்றும் அதற்கு மேல் இலவச இடம்.
 • ப்ரோசஸர் : இன்டெல் i3 மற்றும் அதற்கு மேலே.
 • திரை அளவு: 14.6 “மற்றும் அதற்கு மேலே.

2.2 வியாபார்  ஆப் பதிவிறக்கம் மற்றும் நிறுவல்:

 1.   வியாபார் டெஸ்க்டாப் ஆப் எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் www.vyaparapp.in
 2.   முகப்புப்பக்கத்தில், டெஸ்க்டாப்பிற்கான பதிவிறக்கம்(விண்டோஸ்) ‘என்ற ஒரு பொத்தானை நீங்கள் காணலாம் அருகிலேயே ‘அண்ட்ராய்டு பதிவிறக்கம்’ பொத்தானையும்  காணலாம்.
 3.   உங்கள் விருப்பத்தின் படி பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் தொடங்கும்.
 4.   இது வழக்கமாக உங்கள் இணைய வேகத்தை பொறுத்து 30 விநாடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை எடுக்கும், சில நேரங்களில், இன்னும் நீண்ட நேரம் ஆகும்
 5.   அதன் பிறகு, உங்கள் பதிவிறக்க கோப்புறையிலுள்ள ‘Vyaparapp.exe‘ கோப்பை இரண்டு முறை கிளிக் செய்யவும்.
 6.   மேலே கூறியது போல  அனைத்து படிகளும் சரியாக பின்பற்றினால், நீங்கள் வியாபார் ஐகானுடன் இயங்கும் ஒரு நிறுவியை பார்ப்பீர்கள்.
 7.   வழக்கமாக, ஆப் – ஐ நிறுவ 2 முதல் 3 நிமிடங்கள் ஆகும்.
 8.   பின்னர், ஆப் தானாகவே திறக்கும், பின்னர் உள்நுழைவு திரை தோன்றும்.
 9.   இப்போது, நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வணிகத்தின் பெயர், உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்ணையும் சேர்த்து வியாபார் -ஐ  உங்கள் வழியில் பயன்படுத்த தொடங்கலாம் !!!

(குறிப்பு: நீங்கள் ஏற்கனவே வியாபார் மொபைல் ஆப் – ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்து காப்புப் பிரதிகளை மீட்டெடுக்கலாம்).

வியாபார் உங்கள் ஜிஎஸ்டி பட்டியலிடல் மற்றும் தாக்கல் செய்வதில் எப்படி உதவுகிறது என்பதைப் பார்க்கவும் மேலும் பல தகவல்களுக்கு www.vyaparapp.in என்ற இணையதளத்தில் பார்வையிடவும்.

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

 

You May Also Like

Leave a Reply