28 வது ஜிஸ்டி கவுன்சிலின் மேம்படுத்தல்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமீபத்திய வரிவிகித  மாற்றங்கள்.

vyapar, accounting, GST

28வது ஜிஸ்டி கவுன்சில் வரி செலுத்துவோருக்கு ஒரு நிவாரணமாக மாறியுள்ளது. இனி வரும் மாற்றங்கள் இதோ:

  1. சானிடரி நாப்கின்கள் ஜிஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:ஆஹா! பெண்களின் குரல் சத்தமாக கேட்டது போல் தெரிகிறது.
  2. 1% சர்க்கரை வரி மீது எந்த தீர்மானமும் இல்லை: ஒருவேளை இதை கண்டுபிடிக்க இந்த கவுன்சிலுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது போலும்.
  3. ஹோட்டல்களுக்கான  ஜிஸ்டி இப்போது அறிவித்த  கட்டணத்தில் இல்லாமல் உண்மையான கட்டணத்தில் இருக்கும்.
  4. எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் .இதற்கு முன்னதாக 18% ஆக இருந்த மதிப்பு இப்போது 5% ஆக குறைந்து  இருக்கிறது.
  5. 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட காலணி மீது 5% ஜிஸ்டி உச்சவரம்பு: கடுமையான வரிகளை பொறுத்துக் கொள்ளாமலேயே, அதிக விலையுயர்ந்த காலணிகளை அடையலாம்.
  6. சாயங்கள்,வார்னிஷ்கள் மற்றும் சுவர்களுக்கான மக்குகள் (பட்டி)ஆகியவற்றின் ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூங்கில் தரைதளத்திற்கான ஜிஸ்டி 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது: வீடு சீரமைப்பிற்கான நேரம் இது.
  7. அனைத்து தோல் பொருட்கள் மீதான  ஜிஸ்டி 28% லிருந்து  18% ஆக குறைக்கப்பட்டுள்ளது : இதனால் இப்போது நீங்கள்  தோல் பொருட்கள் வாங்குவதற்கு  பச்சை சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.
  8. சிறப்பு நோக்கத்திற்கான வாகனங்கள், வேலை டிரக், டிரெய்லர் ஆகியவற்றின்  ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது: இப்போது, ​​அநேக மக்களுக்கு இது நிவாரணமாக அமைந்துள்ளது.
  9. பிரிவு 9 (4) ன் கீழ் ரிவெர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்  அமைப்பானது 30/09/2019 வரைக்கும் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  10. நுகர்வோர் மின்னணு இயந்திரங்கள் – தொலைக்காட்சி (27 அங்குலம் வரை) , சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி, கலவை(மிக்சர்), ஜூசர், அரவை ஆகியவற்றின்  ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது: தேவையான வீட்டு  உபயோகப் பொருட்கள்  இப்பொழுது மலிவு விலைக்கு வாங்க முடியும்.

ஹாப்பி வியாபாரிங்!!!Accounting software, GST compatible accounting software, Vyapar, Invoicing software

You May Also Like

Leave a Reply